கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க இருக்கும் டைரக்டர் ஷங்கரின் மகள். திருமண தேதியும் அறிவிப்பு – விவரம் இதோ

Shankar
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள். அதுமட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் ஒரு முக்கிய டைரக்டராகவும் அவர் திகழ்ந்து வருகிறார். அவர் இயக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்டமான செலவில் உருவாக்கப்பட்டாலும் பாக்ஸ் ஆபீசிலும் ஹிட் அடித்து பெரிய பிரம்மாண்டமான இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் சங்கர்.

Shankar 1

- Advertisement -

இந்திய திரையுலகில் முன்னணி டைரக்டராக வலம் வரும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இதில் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளது. நாளை ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த திருமணம் ஆனது கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு பிறகு ஊரடங்கு முடிந்த பின்னர் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் சங்கரின் மகள் திருமணம் செய்ய இருப்பது ஒரு கிரிக்கெட் வீரர் என்பதுதான். அதன்படி புதுச்சேரி அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் ரோஹித்தை தான் சங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

py rohith

29 வயதான ரோஹித் பாண்டிச்சேரி அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி டிஎன்பிஎல் கிரிக்கெட் விளையாடும் அவர் மதுரை பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் அந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக 63 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement