என்னங்க கேப்டன் இவரு ? மொதல்ல இந்திய அணிக்கு இவரை கேப்டனாக்குங்க – ரசிகர்கள் கொதிப்பு

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மீண்டும் ஒரு முறை ஐசிசி கோப்பையை தவறிவிட்டிருக்கிறது இந்திய அணி. ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பையை கைப்பற்ற கிடைத்த சிறந்த வாய்ப்பை வீணடித்திருக்கும் விராட் கோஹ்லியின் மீது, இந்திய ரசிகர்கள் சரமாரியான விமர்ச்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பதோடு மட்டுமல்லாமல், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு இந்திய அணியின் மற்றொரு சிறந்த வீரராக திகழும் ஒருவரை கேப்டனாக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோஹ்லிக்கு, 2017ஆம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஒரு பேட்ஸ்மேனாக சிறந்து விளங்கிய அவர், 2017ஆம் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடர் என இரண்டு ஐசிசி தொடரிலும் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட தவறிவிட்டார்.

அதிலிருந்தே அவருடைய கேப்டன்சியின்மீது ரசிகர்கள் பல்வேறு விமர்ச்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் வெற்றி பெற முடியவில்லையென்றாலும், எளிதாக ட்ரா செய்துவிடலாம் என்றிருந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது படுமோசமான தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

kohli 2

இதன் விளைவாக இந்திய அணியை விராட் கோஹ்லி சரியான பாதையில் வழிநடத்தவில்லையென்றும், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு மற்றொரு வீரரான ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை இந்திய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Rohith-1

ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையும் ரோஹித் சர்மாவிற்கு வழங்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துகளை கூறியிருக்கின்றனர். ஐபிஎல் தொடர்களில் மும்மை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மா ஐந்து முறை அந்த அணிக்காக கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார். மேலும் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த தொடரையும் வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement