எந்தவித மாற்றமும் இல்ல. முடிஞ்சா மோதிப்பாகட்டும் கோலி எடுத்த அதிரடி – ஒருவழியா டாஸ் போட்டாச்சு

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரண்டாவது நாளில் துவங்கியுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற டாசிற்குப் பிறகு டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளது. அதன்படி இந்திய அணி தற்போது முதலில் இன்னிங்சில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

indvsnz

- Advertisement -

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே அணி தான் விளையாடும் என்று கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கும் வேளையில் பின்வரிசையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருப்பதால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது.

அது மட்டுமின்றி வேகப்பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா ஆகியோரும் இந்திய அணியின் பவுலிங்கில் நிச்சயம் கைகொடுப்பார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.

bumrah

நியூசிலாந்து அணியில் பிளேயிங் லெவனில் 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ : 1)ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட் , 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) ஷமி, 11) இஷாந்த் சர்மா

Advertisement