இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க நான் ஆசைப்பட்டதே கிடையாது. ஏன் தெரியுமா ? – கவாஸ்கர் விளக்கம்

Gavaskar
- Advertisement -

உலகிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட ஒருபோதும் விரும்பியது இல்லையென்றும், அதற்கான காரணம் என்னவென்றும் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ், பிஷான் சிங் பேடி, அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியில் பயிற்சியாளராகவும் செயல்பட்டிருக்கின்றனர். மேலும் கிரிக்கெட்டில் கோலோச்சியிருந்த பல வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதை மிகப் பெரிய கௌரவமாக நினைத்து பல முறை அந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

gavaskar

- Advertisement -

ஆனால் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய சுனில் கவாஸ்கர் அந்த பதவியில் இருக்க விரும்பவில்லை என்று கூறியது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேட்டியளித்த அவர், நான் கிரிக்கெட் விளையாடிய கால கட்டத்தில்கூட அதனை மிகவும் விரும்பி பார்ப்பேன். போட்டியின்போது என்னுடைய விக்கெட்டை இழந்து நான் பெவிலியனுக்கு வந்த பிறகு அந்த போட்டியை முழுமையாக நான் பார்க்க மாட்டேன்.

சிறிது நேரம் அதனை கவனிப்பேன் பின்பு உடை மாற்றும் அறைக்கு சென்று ஏதாவது ஒன்றை படித்து கொண்டிருப்பேன் அல்லது கடிதங்களுக்கு பதில் அளிப்பேன். இதனை முடித்துவிட்டுதான் மீண்டும் நான் போட்டியை காண ஆரம்பிப்பேன். ஆனால் ஒரு பயிற்சியாளராக செயல்படும்போது போட்டியின் ஒவ்வொரு பந்தையைம் கவனிக்க வேண்டியது அவசியாமான ஒன்றாக இருக்கும்.

Gavaskar

என்னால் அதுபோல இருக்க முடியாது என்பதால்தான் ஒரு பயிற்சியாளராக செயல்பட நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார். அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் ட்ராவிட், சவுரவ் கங்குலி போன்ற வீரர்கள் பேட்டிங் பற்றி பல முறை என்னிடம் ஆலோசனைகளை கேட்டிருக்கின்றனர். நானும் அவர்களுக்கு என்னுடைய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். அது எனக்கு மிகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வீரர்கள் தடுமாறும்போது அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி என்னால் உதவ முடியும்.

IND

ஆனால் அதையே ஒரு பயிற்சியாளராக இருந்து முழு நேரமும் என்னால் செய்ய இயலாது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்கு ஒரு பயிற்சியாளராக இல்லாமல் இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளின் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய வீரர்களுக்கும் தனது ஆலோசனைகளை எப்போதுமே வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement