முன்னாடிலாம் ஒருத்தர் இல்ல 2 பேர் தான் இருப்போம். ஆனா இப்போ நாங்க 5 பேர் இருக்கோம் – கெத்தாக பேசிய ஷமி

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

INDvsNZ

- Advertisement -

அந்த வகையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த போட்டி குறித்தும், இந்திய அணியின் பலம் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பவுலிங் யூனிட் முன்னைவிட இப்போது பலமாக உள்ளது. ஏனெனில் முன்னெல்லாம் இந்திய அணியில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் ஒரு சிலரே இருப்பார்கள்.

ஆனால் தற்போது உள்ள இந்திய அணியில் 4-5 பேர் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச கூடியவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்திய அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் இருப்பதால் எந்த மாதிரியான பிட்ச் அமைப்பது என்று எதிரணியினர் குழம்பியுள்ளனர். மேலும் இதற்கு முன்னர் இந்திய அணியில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச கூடிய வீரர்கள் 5 பேர் இருந்தது இல்லை. அதனால் இந்திய அணிக்கு எதிராக மற்ற அணியினர் சுலபமாக திட்டமிட்டு விடுவார்கள்.

shami

ஆனால் இப்போது அது முடியாது. ஏனெனில் தற்போது அணியில் இருக்கும் நாங்கள் 5 பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பான வேகத்தில் பந்து வீச கூடியவர்களாக இருக்கிறோம் என முகமது ஷமி கூறினார். ஷமியின் இந்த கருத்து முற்றிலும் உண்மையான கருத்து தான். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி தனது சிறப்பான வேகப்பந்து வீச்சின் மூலம் உலக அணிகளை வீழ்த்தி வருகிறது.

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அயல் நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் என பல வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் எதிரணியை கலங்க வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பாரத் அருண் பயிற்சியின் கீழ் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement