கோலி கன்ட்ரோல் பண்ணனும். இல்லனா பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – டேவிட் லாயிட் எச்சரிக்கை

David-lloyd
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இதுவரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 3-1 என்கிற கணக்கில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. அதன் பின்னர் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

ind

இந்த தொடர் முழுவதுமே 3வது நடுவரின் தீர்ப்பு விஷயத்தில் மிகப்பெரிய சிக்கல் இருந்தது. ஃபீல்டு நடுவர்கள் இருவரும் கொடுக்கும் ரிசல்ட் சில சமயம் சாதகமாகவும் சில சமயம் சாதகமில்லாத வகையிலும் மூன்றாவது நடுவரின் தீர்ப்பு அமைந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கேப்டன் கோலி நடுவர்களின் தவறான தீர்ப்பு குறித்து கோபத்துடன் ஃபீல்டு நடுவர் இடத்தில் வாக்குவாதம் ஏற்படுத்தி வந்த வண்ணம் இருந்தார்.

விராட் கோலியின் நடவடிக்கை குறித்து இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நடுவரின் தீர்ப்பே இறுதியானது அது சரியாக இருக்கும் பட்சத்திலும் சரியாக இல்லாத பட்சத்தில் அவரது தீர்ப்புக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் விராட் கோலி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கோபத்துடன் நடுவர்கள் இடத்தில் சலசலப்பு ஏற்படுத்துகிறார். இது ஒரு கேப்டனுக்கு அழகல்ல என்று டேவிட் கூறியுள்ளார்.

umpire kohli 1

கோபத்தை பேட்டிங்கிலும் அணியின் பெர்ஃபார்மன்ஸ்ஸிலும் காட்ட வேண்டுமே தவிர நடுவர்கள் இடத்தில் காட்டுவது சரியல்ல. சில காலமாகவே நடுவர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் சண்டை போட்டு வருவது வழக்கமான விஷயமாகிவிட்டது.அதை விராட் கோலி இந்த தொடர் முழுவதும் செய்து வருவது அவருக்கு நல்லதல்ல , இதை மென்மேலும் அவர் செய்யும் பட்சத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டேவிட் லாயிட் கூறியுள்ளார்.

umpire kohli

அவரின் இந்த கருத்துக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்து வருகின்றன. கோலியின் இந்த விடயம் குறித்த உங்களது குருத்துக்களை கமெண்ட் செக்சனில் பதிவிடலாம் நண்பர்களே…

Advertisement