நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்த 3 விடயங்களை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். இந்திய அணியின் முதல் விக்கெட்டாக கே எல் ராகுல் தொடக்கத்திலேயே அவுட் ஆகினார். பின்னர் வந்த கோலி 5 பந்துகள் பிடித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அணியின் கேப்டனான விராட் கோலி தொடக்க விக்கெட்டை இரண்டாவது ஓவரில், இந்திய அணி பறி கொடுத்ததை தனது கருத்தில் வைத்து நிதானமாக ஆடி இருக்க வேண்டும்.

ஒருவேளை அப்படி அவர் ஆடி இருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி சந்தித்து இருந்திருக்காது. இந்திய அணியின் டார்கெட்டும் அதிகமாக இருந்திருக்கும். பின்னர் தவான் மற்றும் பண்ட் என ஆட்டமிழக்க இந்திய அணி டாப் ஆர்டரில் 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. இந்த போட்டியில் டாப் ஆர்டரின் மோசமான செயல்பாடும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இரண்டாவதாக அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடி பந்து வீச்சாளர்களுக்கு பிரஷரை போடுவார். ஆனால் அணியின் ஸ்கோர் மிக கம்மியாக இருந்த நிலையில் களமிறங்கிய பாண்டியா தனது அதிரடி யுத்தியை பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் , மிக மெதுவாகவே ஆரம்பித்தார். பதினைந்து பந்துகள் பிடித்து 17 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தார். பின்னர் தேவையில்லாத ஷாட்டை ஆடி அவுட்டாகி போனார்.

பாண்டியா மட்டும் நேற்று தனது அதிரடியை தொடக்கம் முதலே கொடுத்து இருந்தால் அணியின் ஸ்கோர் வேறாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்றாவதாக வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே ஓவர்களில் பந்துவீச்சுக்கு பெயர் போனவர்.சென்ற வருடம் பெங்களூரு அணிக்கு பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி சுந்தர் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.அப்படி இருக்க நேற்று சுந்தருக்கு பவர் பிளே ஓவர்களில் பந்துவீச வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் கேப்டன் கோலி சுந்தருக்கு அந்த வாய்ப்பை வழங்க வில்லை.

ஆர் சி பி அணிக்கு கொடுத்த அந்த வாய்ப்பை போல நேற்றும் பவர் பிளே ஓவர்களில் சுந்தருக்கு பந்துவீச கேப்டன் கோலி வாய்ப்பு அளித்திருந்தால் இங்கிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை சுந்தர் எடுத்து இருந்திருப்பார் என்பது குறிப்பிடதக்கது.



