சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 3 – 1 என்கிற கணக்கில் தோற்கடித்து தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் தொடர் முழுவதுமே சரியாக பெர்ஃபார்ம் செய்த வீரர்கள் வரிசையில் ரோகித்சர்மா, ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரை பற்றி யாரும் பேசாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று இங்கிலாந்து வீரர் மைக்கேல் வான் கூறியுள்ளார்.

சுந்தர் வெறும் பவுலிங் மட்டும் தான் போடுவார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த பொசிசனில் இறக்கி விட்டாலும் கொஞ்சம் கூட பயமின்றி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று மைக்கேல் வான் கூறினார். இதற்குமுன் அவ்வளவாக டெஸ்ட் போட்டியில் விளையாட சுந்தர் நம்பர் எட்டில் களமிறங்கி அதுவும் ஆஸ்திரேலியாவில் மூன்று அரை சதங்கள் அடித்த விதம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பேட்டிங்கில் எந்தவிதக் குறையும் இன்றி ஆடி வருகிறார். எக்ஸ்ட்ரா கவர் திசையில் வந்த எப்படி கையாள்வது என்பதை நன்கு கணித்து வைத்துள்ளார். லெக் மூவ்மெண்ட்மும் சரியாக உள்ளது. அவரை இங்கிலாந்து தொடரில் சற்று முன்கூட்டியே பேட்டிங் ஆட வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். நினைத்தது போல் டாப் ஆர்டரில் சுந்தரை இந்திய அணி இறக்கவில்லை.

நான்காவது டெஸ்ட் போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம்கூட பதட்டமில்லாமல் அடித்த 96* ரன்கள் அவ்வளவு எளிதாக அடிக்கக்கூடிய ரன்கள் அல்ல.மேலும் எனக்கு அவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.இனி வரும் நிறைய டெஸ்ட் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இருபத்தி ஒரு வயதுதான் அவருக்கு தற்பொழுது ஆகிறது. அவரால் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கும் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

இப்போதிலிருந்தே அவருக்கு சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் நிச்சயம் இந்தியாவின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக வருங்காலத்தில் வலம் வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று மைக்கேல் வான் சுந்தரை புகழ்ந்து தள்ளினார்.



