வார்னர் விலகிய நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்படவுள்ள பெரிய இழப்பு – இந்திய வெற்றி உறுதி

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்குகிறது. பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் இரு அணி வீரர்களும் இப் போட்டியில் விளையாட தயாராக இருக்கின்றனர். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இம்முறையும் தொடரை கைப்பற்ற மும்முரம் காட்டும் அதே போன்று இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியும் பலமாக நாளை சண்டையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் போது காயமடைந்த வார்னர் டி20 தொடரில் பங்கேற்க வில்லை. மேலும் முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்று விலகிய நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த அடியாக ஸ்டீவ் ஸ்மித் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நாளை துவங்க உள்ள இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட ஸ்மித் பத்து நிமிடங்கள் மட்டுமே பயிற்சி செய்ததாகவும் பிறகு பயிற்சிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

பயிற்சியில் இருந்து வெளியேறிய ஸ்மித் நேராக மருத்துவரை அணுகி உள்ளார் என்ற தகவலை ஆஸ்திரேலிய அணியின் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. இதனால் அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி எவ்வாறு இந்திய அணியை சந்திக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியதால் அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டாரா என்ற சந்தேகமும் வலுவாக எழுந்துள்ளது.

Smith

நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் இரண்டு சதம் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். மேலும் சிறப்பான பார்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவது எவ்வாறு என்று பவுலர்கள் கலங்கிய நிலையில் தற்போது அவர் முதல் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே வார்னர் விளையாடாத நிலையில் ஸ்மித்தும் விளையாடாத நிலை ஏற்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் விளையாடாமல் போனால் அது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு எளிதான வழி அமைக்கும் என்றும் கருதப்படுகிறது. ஸ்மித் காயத்திலிருந்து விடுபட இன்று ஒரு நாள் மட்டுமே கெடு உள்ளது என்றும் அவர் இன்றும் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் அவர் நாளைய டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.

Smith

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் வார்னர், புகோவோஸ்கி மற்றும் கேமரோன் க்ரீன் என அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் ஸ்மித்தும் காயமடைந்துள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆஸ்திரேலிய அணியை சற்று பாதித்துள்ளது. இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்பதும் இந்திய அணிக்கு பின்னடைவாக கூறப்படுகிறது.

Advertisement