இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.
இந்தத் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்றும் மேலும் வழக்கம்போல் இந்த தொடரிலும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு மைதானத்தில் ஒரு வித்தியாசமான நிகழ்வு ஒன்று காணக்கிடைத்தது.
அதன்படி 12 வரை வீசிய நவ்தீப் சைனி 145 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு புல்டாஸ் பந்தை வீச அந்த பந்து நேராக ஆஸ்திரேலிய கேப்டன் பின் அடிவயிற்றில் பட்டது. அதனால் வலியில் துடித்த பின்ச் ஒரு கையால் வயிற்று பகுதியை தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த ராகுல் வேடிக்கையாக வலியில் இருந்த அவரின் வயிற்றுப்பகுதியை தொடமுயன்றார்.
KL Rahul just checking on Aaron Finch after getting hit by a full toss 😅 #AUSvIND pic.twitter.com/lb9Kzthisl
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
உடனே பின்ச் அவரை தடுத்து தள்ளி விட்டு சிரித்தார். அவர்கள் இருவரும் ஜாலியாகவே இதனை செய்தார்கள். இதனை கண்ட ரசிகர்கள் தொடரில் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்று பார்த்தால் இவ்வாறு ஜாலியாக என்ஜாய் செய்கிறார்களே என்று இந்த நிகழ்வை வீடியோவாக இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.