3 மாசம் ஆச்சி பேட் தொட்டு. நல்லவேளை பேட்டிங் பண்றது எப்படின்னு இன்னும் நியாபகம் இருக்கு – பிரபல வீரர் பதிவு

Smith
- Advertisement -

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை ஆஸ்திரேலியா பங்கேற்க இருந்த தொடர், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்க இருந்த தொடர் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட இருந்த தொடர் அனைத்தும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

மேலும் ஒவ்வொரு நாடும் பல தடைகள் விதித்தன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அடுத்த 6 மாத காலத்திற்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் ஒரு வழியாக ஒரு கரோனா கட்டுக்குள் வந்த உடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சி செய்ய இந்த மாதம் துவக்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் மூன்று மாதங்களுக்கு பிறகு தற்போது தனது பயிற்சியை துவக்கி உள்ளார்.

இதனை தனது இன்டகிரம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து.. ‘மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் முதன்முதலாக ஒரு பந்தை சந்திக்கிறேன். பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்று நியாபகம் வைத்துள்ளேன் .’ என்று வேடிக்கையாக பதிவு செய்துள்ளார் ஸ்டீவன் ஸ்மித்.

அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை குறித்து இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement