எனது பவுலிங்குக்கு எதிராக ரொம்ப ஈஸியா ஆடியவர் இவர் மட்டும்தான் – முரளிதரன் ஓபன் டாக்

Muralitharan
- Advertisement -

இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 1992-ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி சுமார் 19 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடியவர். ஸ்பின் பவுலிங் என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது முரளிதரன் தான். அந்த அழிக்க முடியாத தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அறியமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார்.

muralitharan 1

- Advertisement -

133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஷேன் வார்ன் இருக்கிறார். முரளிதரனின் இந்த சாதனையை முறியடிப்பது இனிமேல் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விடயம்.

மேலும் அவர் பந்துவீசும் போது பேட்டிங் செய்தவர்களும் சளைத்தவர்களல்ல சச்சின், லாரா, ராகுல் டிராவிட், பாண்டிங், கங்குலி, ஹெய்டன் கில்கிரிஸ்ட் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது கெரியரில் பந்து வீசியுள்ளார். இந்நிலையில் தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் பந்து வீச மிகவும் கஷ்டப்பட்ட சவாலான பேஸ்மென்ட் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

lara

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முரளிதரன் : நான் பல பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசி இருக்கிறேன். ஆனால் அதில் ஒரு கடினமான பேரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாராவைதான் கூறுவேன். அவருக்கு எதிராக நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறேன்.

Lara 1

எனது பவுலிங்கில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா எப்போதுமே சிறப்பாக ஆடினார். மேலும் ஸ்பின் பகுதியில் அவர் எளிதாக ஆடும் தன்மை உடையவர் என்றும் முரளிதரன் கூறியது குறிப்பிட்டது.

Advertisement