தோனி கிட்ட நல்ல பேரு எடுக்கனுன்னு நான் என்னவெல்லாம் செய்து இருக்கிறேன் தெரியுமா ? – மனம்திறந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக கடந்த 10 வருடங்களாக இருந்து வருகிறார். முதன்முதலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான். ஆம் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

- Advertisement -

முதன்முதலில் 2010ஆம் ஆண்டில் தான் களமிறங்கினார் முதல் இரண்டு ஆண்டுகள் இவரை அணியின் கேப்டனாக இருந்த தோனி களம் இறக்கிவிடவே இல்லை. இந்நிலையில் இது குறித்து தற்போது பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் கூறியது…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008ம் ஆண்டு தேர்வானேன். முதல் இரண்டு ஆண்டுகள் தோனி என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவருக்கு என்னைப் பற்றி சுத்தமாக தெரியாமல் இருந்தது. அவரின் கவனத்தை ஈர்க்க நான் மிகப் பெரிய முயற்சிகள் செய்தேன். எப்போதும் இதுதான் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

Ashwin

அதற்காக சரியான வாய்ப்பு கிடைக்கும் வரை காத்து கொண்டு இருந்தேன். 2010 ஆம் ஆண்டு முதல் போட்டியில் ஆடும் போது அவரது கவனத்தை ஈர்த்தது. இதுதான் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

- Advertisement -

அவர் கூறியதைப் போலவே 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அபாரமாக பந்து வீசியுள்ளார் அஸ்வின். 2011ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் சராசரி வெறும் 19 மட்டுமே. அதன் பின்னர் 2011ம் ஆண்டு இந்திய அணிக்காக களம் இறங்கினார். தற்போது வரை 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 305 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Ashwin

2015ற்குப் பிறகு ரைசிங் புனே, கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடிய அவர் தற்போது 2020 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement