ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் டைபு இந்திய அணியின் முன்னணி வீரர்களான தோனி குறித்தும் தினேஷ் கார்த்திக் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் தோனி குறித்தும் தினேஷ் கார்த்திக் குறித்தும் கூறுகையில் :

தோனியின் கீப்பிங் முறை மற்றும் பேட்டிங் முறை ஆகியவை இரண்டும் வித்தியாசம் வாய்ந்தவை. நான் முதன்முதலாக தோனியை பார்த்தபோது அவரைவிட தினேஷ் கார்த்திக்கை இயல்பான விக்கெட் கீப்பர் என்று கருதினேன். ஏனெனில் தோனி கீப்பிங் செய்யும்போது சுண்டுவிரலை இணைந்திருப்பது போல வைத்திருப்பதே இல்லை.
அந்த முறையை பயன்படுத்திதான் அவர் நிறைய கேட்சிகளை பிடிக்கிறார். அதுவே விக்கெட் கீப்பிங்கில் அவரது யுத்தியாகவும் உள்ளது. ஆனால் தினேஷ் கார்த்திக் கீப்பிங்கில் மிகவும் இயல்பானவர். அதே போன்று தோனியின் பேட்டிங் முறையிலும் வித்தியாசத்தை காணமுடிகிறது. தோனி பேட்டிங் செய்யும்போது அவரது கைகளும் கண்களும் இணைந்தே செயல்படுகின்றன.

அதுமட்டுமின்றி அவரது பேட்டிங்கில் அவரது தன்னம்பிக்கை பிரதிபலிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கிலும் மிக இயல்பானவர் மேலும் தோனியை விட அவரால் சிறப்பாக ஆட முடியும் என்று தான் நினைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணிக்கு எதிராக தான் விளையாடுகையில் ராகுல் டிராவிட், சச்சின் போன்றவர்களின் ஆட்டத்தை பார்த்து நான் பல விடயங்களை பேட்டிங்கில் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நாட்களில் பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான இவரது கருதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி குறித்து ஒரு செய்தியாவது தினசரி வெளிவந்து விடுகிறது.

அந்த வகையில் தற்போது தினேஷ் கார்த்திக் உடன் தோனியை ஒப்பிட்டு பேசி உள்ள அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான டைபு அந்த அணிக்காக 28 டெஸ்ட் போட்டிகள், 150 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



