அவரது பந்துவீச்சை பார்த்து நானே மிரண்டு போயிருக்கேன். என்ன ஸ்விங் அதும் அவ்ளோ வேகமா – ஸ்டெய்ன் கூறிய அந்த பவுலர் யார் தெரியுமா ?

Steyn
- Advertisement -

சமகாலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தது போலவே மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களும் இருந்து வருகின்றனர். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், ஜோ ரூட் என பலர் இருப்பது போலவே பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். ஸ்டூவர்ட், பிராட் ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெயின், மிட்செல் ஜான்சன் என பலரும் ஒரே காலகட்டத்தை சேர்ந்தவர்கள்.இவர்களில் யார் சிறந்த பந்துவீச்சாளர் என்ற விவாதம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

Steyn

- Advertisement -

இதில் முக்கியமான இருவர் டேல் ஸ்டெய்ன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர். ஸ்டெய்ன் கடந்த 2004ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடிவருகிறார். தற்போது 36 வயதான அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 26 முறை ஐந்து விக்கெட்டுகளையும், ஐந்து முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி அபாரமாக 22.95 ஆக இருக்கிறது.

அதே நேரத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2003 முதல் இங்கிலாந்து அணிக்காக ஆடி வருகிறார். இதுவரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 28 முறை 5 விக்கெட்டுகளும், மூன்று முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருவருமே பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்கள் .

anderson 2

அதேநேரம் வேகத்திற்கும் பஞ்சம் இருக்காது. இந்த திறமையை வைத்து டெஸ்ட் வீரர்களை அவ்வப்போது அச்சுறுத்தி வந்தனர். இதில் ஸ்டெய்ன் கிட்டத்தட்ட ஆறு வருடம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இந்நிலையில் இருவரில் யார் சிறந்தவர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

anderson 1

நான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சை பார்த்துள்ளேன். அவர் மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர் .அவர் மிகவும் அதிகமாக பந்தினை ஸ்விங் செய்வார். அவர் ஸ்விங் செய்வதை போல் என்னால் கண்டிப்பாக செய்ய முடியாது. நான் அவரது மிகப்பெரிய ரசிகன் .அவர்தான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். எனது காலத்தில் அவரைப் போன்ற பந்துவீச வேறு யாரும் இல்லை. இதில் பொய் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார் டேல் ஸ்டெய்ன்.

Advertisement