கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தோனியின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்து தன் இஷ்டத்திற்கு ஜாலியாக சுற்றித் திரிந்தார். தொடர்ந்து 7 முதல் 8 மாதங்கள் இவ்வாறு இருந்ததால் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் காரணமாக உடனடியாக பயிற்சியை துவக்கினார் தோனி. மீண்டும் இந்திய அணியில் வரவேண்டுமானால் தன்னுடைய உடற்தகுதி மற்றும் பேட்டிங் பார்ம் ஆகிய இரண்டையுமே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் தோனி. இதனை நிருபிக்க ஐபிஎல் தொடரை நம்பியிருந்தார். ஆனால் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது.
மேலும், விளையாட்டு மருத்துவர்களை அணுகி தனது உடல்நிலை எப்படி இருக்கிறது எனவும் ஆலோசித்து பயிற்சியை துவக்கினார் தோனி. பயிற்சியை துவக்கி 10 நாட்களுக்குள் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போதுவரை ஐபிஎல் தொடர் நடக்குமா இல்லையா என்பது குறித்து என்ற செய்தியும் இல்லை .மீண்டும் அவர் இந்திய அணிக்குள் வரவேண்டுமானால் டி20 உலக கோப்பை தொடருக்கு தான் வரவேண்டும்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதில் மட்டுமே தோனிக்கு ஆசை இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் மட்டுமே மீண்டும் அணியில் இடம்பிடிக்க முடியும். ஆனால், ஐபிஎல் தொடரே கேள்விக்குறியாகி உள்ளது . இதன்காரணமாக தோனியின் ஆசையில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது என்றே கூறலாம்.

இதனால் தோனியின் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் வருத்தத்தில் உள்ளனர்.மேலும் தோனி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வியோடு அவரின் வருகைக்காக அவரது ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



