இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கும் நேரம், சேனல், மைதானம் – முழு விவரம் இதோ

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டி20 தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அதற்கடுத்து ஒருநாள் தொடரையும் தற்போது டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்திய அணி இந்த முறை அதை போக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று நியூசிலாந்து அணியும் பவுலிங்கில் மிரட்டி வருகிறது. மேலும் அந்த அணியில் நீல் வாக்னர் அணியில் இடம்பிடித்துள்ளதால் அணியின் பலம் அதிகரித்துள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு துவங்கும் என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலமாகவும் நேரடியாக போட்டியை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement