இவர் ஒருத்தர் இல்லாததால் தான் இந்திய அணி இப்படி மோசமாக விளையாடி வருகிறது – வெளியான தோல்வி குறித்த ரிப்போர்ட்

Ind-lose
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நியூசிலாந்தில் தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 5 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. அதன்பிறகு நியூசிலாந்து அணி அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஒரு நாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

indvsnz

- Advertisement -

அதைத் தொடர்ந்து தற்போது துவங்கியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த தொடர்ச்சியான தோல்விகளால் தற்போது பல்வேறு விமர்சனங்களில் எதிர்கொண்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்த தொடரில் தோல்வி குறித்து கேள்விகளும் அதிகளவில் எழுந்துவருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு காரணம் ரோஹித் சர்மா விளையாடாததே பின்னடைவாக அமைந்தது என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கூறிவருகின்றனர். அதன்படி டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து வெளியேறி இந்தியா திரும்பினார். கடந்த பல ஆண்டுகளாக துவக்க வீரராக ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா அதிக ரன்களை குவித்து வருவதால் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது.

Rohith-4

இந்நிலையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் மற்றும் தவான் இல்லாத காரணத்தினால் ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஒருநாள் தொடரில் துவக்க வீரராக விளையாடினார்கள். அவர்களது துவக்கம் இந்திய அணிக்கு கை கொடுக்காததால் தோல்வி ஏற்பட்டது. மேலும் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் அந்த ஜோடியே விளையாடி வருகிறது.

Rohith

ரோஹித்தின் இழப்பு இந்திய அணிக்கு பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. ரோஹித் இருந்திருந்தால் நிச்சயம் இது போன்ற தோல்வி எழுந்திருக்காது இந்திய அணிக்கு அதிரடி துவக்கத்தை அவர் கொடுத்திருப்பார் என்று ரசிகர்களும், புள்ளிவிவரங்களும் எடுத்துக் காட்டுகிறது. மேலும் பலரும் அதை ஏற்றுக் கொண்டுதான் உள்ளனர். ஏனெனில் ரோஹித் அந்தளவிற்கு துவக்கவீரராக தனது பங்கை அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement