இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியின் நான்காம் நாளான இன்று இந்த ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : டாஸ் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது . ஆனால் ஒரு பேட்டிங் யூனிட்டாக எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவு சரியாக நாங்கள் ஆடவில்லை. எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சரியான அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டோம்.
முதல் இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் . சில விக்கெட்டுகளை எளிதாக கொடுத்துவிட்டோம். முதல் இன்னிங்சின் போது எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாம் எடுக்கும் ரன்கள்தான் ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறினார் . மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷாவின் ஆட்டம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ப்ரித்வி ஷாவின் ஆட்டம் குறித்து பேசிய கோலி கூறியதாவது : பிரித்திவ் ஷா தற்போது தான் வெளிநாட்டு மண்ணில் இரண்டு போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் அவர் இயற்கையாகவே அடித்து ஆடும் வீரர் ஆவார் என்று கூறினார். இதன்மூலம் அடுத்த போட்டியிலும் ப்ரித்வி ஷா விளையாடுவது உறுதியாகியுள்ளது என்றே கூறலாம்.



