கங்குலி திட்டமிட்ட ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல். காரணம் இதுதான் – முழு விவரம் இதோ

Rcb
- Advertisement -

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டுக்கான பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் போட்டிகள் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Ipl cup

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக 8 அணிகளை பிரித்து வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு அணிகளாக பிரித்து இரண்டு அணிகளாக ஆல் ஸ்டார்ஸ் போட்டி ஒன்றை இந்தியாவின் மிகப் பெரிய மைதானத்தில் (மோதிரா மைதானம்) நடத்த திட்டமிட்டிருந்தார் பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி.

ஏற்கனவே இந்த பிரமாண்ட போட்டி குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால் இந்நிலையில் தற்போது அந்த போட்டி நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி வெளியான தகவலில் சில அணிகளின் வீரர்கள் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. வீரர்களின் காயம் மற்றும் அவர்களின் செயல்பாடு குறித்த எந்த தகவலை சில அணி நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.

ipl

அதனால் திட்டமிட்டபடி அந்த ஆல்ஸ்டார்ஸ் போட்டியில் குறிப்பிட்ட வீரர்கள் பங்கேற்பார்களா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படி இருப்பினும் வீரர்கள் பகிரப்பட்டு போட்டி நடைபெறும் என்று தெரிகிறது. ஆனால் அதற்குமுன் முறையான அறிவிப்பு வெளியாகும் வரை இந்த போட்டி நடைபெறுவது சந்தேகம்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement