நியூசிக்கு இமாலய இலக்கு நிர்ணயிப்பு. சதம் அடித்த ஐயர். பொளந்துகட்டிய ராகுல் – விவரம் இதோ

Iyer-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போது ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

indvsnz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து செய்தது அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து முடித்தது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக அறிமுக ஜோடி ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடியது. அகர்வால் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிலையிலும், ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கோலி அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4 ஆவது வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 5 ஆவது வீரராக களமிறங்கிய ராகுல் தனது அதிரடியை இந்த போட்டியிலும் தொடர்ந்தார்.

iyer

களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடிய ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரி என 88 ரன்களை குவித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களை குவித்தது. இதனையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாட நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது.

Advertisement