இந்திய ஏ அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அந்நாட்டு ஏ அணிக்கு எதிராக அதிகாரபூர்வமற்ற 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 150 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 230 ரன்கள் அடிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் மிச்சம் இருக்க 231 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. கடந்த போட்டியை போல இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் துவக்க வீரராக களம் இறங்கிய ப்ரித்வி ஷா 35 பந்தில் 48 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியிலும் ப்ரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. அனைத்து பந்துவீச்சாளர்களையும் எளிதாக அடித்து நொறுக்கினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இடம் பிடித்துள்ள பிரித்வி ஷா தற்போது நியூசிலாந்தில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளதால் அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியில் இடம் பெற்றது மட்டுமின்றி விளையாட வாய்ப்பும் கொடுத்தால் அவர் நிச்சயம் இந்திய அணியின் முக்கிய வீரராக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து காயம் மற்றும் ஊக்கமருந்து பிரச்சனையால் சிக்கிய ப்ரித்வி ஷா தற்போது அபாரமான பார்ம்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



