இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு உண்மையான சோதனையாக அமைய இருக்கும் பெரிய தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் அமைய உள்ளது.
ஏனெனில் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான t20 இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொடரில் இடம் பெற்றிருந்த துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்ததால் அவருக்கு பதில் சஞ்சு சம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அதே இந்திய அணி இடம்பெற்றிருந்தாலும் ஒரே ஒரு மாற்றமாக தவானுக்கு பதில் முதன்முறையாக பிரித்வி ஷா ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
NEWS: India’s ODI squad against New Zealand announced: Kohli (C), R. Sharma (VC), P. Shaw, Rahul, Shreyas, M. Pandey, Pant (WK), S. Dube, Kuldeep, Chahal, Jadeja, Bumrah, Shami, Saini, S. Thakur, Kedar
Dhawan ruled out of T20I and ODI series. Details – https://t.co/lw5gZey833 pic.twitter.com/5ATv8QTLLe
— BCCI (@BCCI) January 21, 2020
இந்த தொடரில் பிரித்வி ஷா அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 15 பேர் கொண்ட அணியை பகிர்ந்துள்ளது. பிசிசிஐ-யின் இந்தப் பதிவிற்கு ஆதரவாக ரசிகர்கள் இந்திய அணியை வாழ்த்தி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.