இந்திய அணியின் இடதுகை தொடக்க வீரரான ஷிகர் தவான் இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013 ஆம் ஆண்டிலும், டி20 அணியில் 2011 ஆம் ஆண்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐ.சி.சி தொடர்களில் சிறப்பாக விளையாடுபவர் என்று பெயரெடுத்து தவான் ரோகித் சர்மாவுடன் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான துவக்கத்தையும் அளித்து வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 133 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 59 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. தவான் 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பாக்சிங் வீராங்கனை ஆவர். மேலும் ஹர்பஜன் முகநூல் பக்கத்தில் நண்பராக இருந்த ஆயிஷா முகத்திற்கு தவான் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து முதலில் இருவரும் அறிமுகமானார்கள். பின்னர் 2009ம் ஆண்டு அவர்கள் நிச்சயம் செய்துகொண்டு 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆயிஷா முகர்ஜிக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ஒருவருடன் திருமணம் நடந்து பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. அதன்பிறகு தவானுடன் காதல் ஏற்பட்டு 2012 ஆம் ஆண்டு தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் ஆயிஷா முகர்ஜியின் இரு மகள்களும் அவர்களுடனே இருக்கின்றனர். மேலும் தற்போது இவர்கள் இருவருக்கும் ஜாரோவர் தவான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

34 வயதாகும் தவானுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான வயது வித்தியாசம் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல பத்து வருடம் என்றால் நம்புவீர்களா ? ஆம் அதுதான் உண்மை தவான் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்துள்ளார். அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி 1975 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பிரபலங்களுக்கிடையே ஓரிரு ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னை விட பத்து ஆண்டுகள் பெரியவரை தவான் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



