இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கோலி ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த ராகுல் கூறியதாவது : நான் ரன்களை அடிக்கும்போது அனைவருக்கும் பிடிக்கிறது. நான் இந்த போட்டியில் ஸ்ட்ரைக்ரேட் குறித்து யோசித்து ஆடவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடவில்லை. எந்தவித யூகத்தையும் வகுத்து விளையாடவில்லை மைதானத்தின் தன்மையை அப்படியே பயன்படுத்தி விளையாடினேன். அதனால் ரன்களை குவிக்க முடிந்தது.

நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியும் எனது வேலை முடியவில்லை என்று நினைக்கிறன். இதுபோன்ற ஹைஸ்கோரிங் போட்டிகளில் இறுதிவரை நின்று அணிக்காக வெற்றி தேடி தரவேண்டும் என்று நினைக்கிறன். ஆனால் இந்த போட்டியில் என்னால் முடியாமல் போனது இனிவரும் போட்டிகளில் அதனை செய்ய முயற்சிப்பேன் என்று ராகுல் கூறினார்.



