128 நாட்களுக்கு பிறகு பேட்டை எடுத்து பேட்டிங் ஆடிய தோனி – வைரலாகும் வீடியோ

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான தோனி இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் இதுவரை இடம்பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தானாக விலகிய தோனி அதற்கடுத்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

மேலும் தற்போதைய வங்கதேச டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு வருகிறார். ராஞ்சி டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களை சந்தித்தார் தோனி அதன்பிறகு அவர் கால்பந்து டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகளை விளையாடி வந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

ஆனால் அவர் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்ளும் வகையிலான வீடியோ எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 128 நாட்களுக்கு பிறகு அவர் தற்போதும் கிரிக்கெட் பயிற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் ராஞ்சி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement