நானும் எல்லோரையும் போலத்தான். என் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து இருக்கிறேன் – மனம் திறந்து பேசிய தோனி

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான தோனி உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அவரது மெதுவான பேட்டிங்கினால் விமர்சிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வந்த வெஸ்டிண்டிஸ் தொடரில் அவரே விலகினார்.

Dhoni

- Advertisement -

பின்னர் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோனியை தேர்வுசெய்யாமல் புறக்கணித்தது பண்டிற்கு வாய்ப்பளித்தது. அதனால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறிதான் என்றும் அவர் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் என்று பலரும் கூறிவருகின்றனர். இருப்பினும் அவர் இதுவரை தனது ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்போது 38 வயதாகும் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பது நல்லது என்று பல கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு குறித்து எந்த ஒரு கருத்தினையும் இதுவரை தெரிவிக்காத தோனி தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புதிய தகவல் ஒன்றை பரிமாறிக் கொண்டார். அது குறித்து தோனி கூறியதாவது :

dhoni

நான் இந்திய அணியில் விளையாடுவது குறித்து யோசித்துக் கொண்டே தான் இருப்பேன் மேலும் ஒரு வீரராக எவரும் அவர்களது இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மேலும் நானும் எல்லாரையும் போல ஒரு சாதாரணமானவன் தான். ஆனால் மற்றவர்களை விட நான் எனது உணர்ச்சிகளை சரியாக கட்டுக்குள் வைத்துள்ளேன் என்று நினைக்கிறேன். எனவே தான் எனக்கு அது ஒரு மனதிடத்தை தருகிறது.

Dhoni-1

டெஸ்ட் போட்டிகள் என்றால் 2 இன்னிங்ஸ்களில் நடக்கும் அது ரொம்ப நீண்ட போட்டி என்பதால் அதனை தாண்டி தற்போது டி20 வந்தது இப்படி கிரிக்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. அதேபோல எனது கிரிக்கெட் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம் தற்போது வந்துள்ளது அதில் எது நடந்தாலும் நான் ஏற்றுக்கொண்டு அறிவிப்பேன் என்று தோனி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement