கம்பீருக்கே இது தப்புன்னு தெரியும்.. சஞ்சு சாம்சனின் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin and Samson
- Advertisement -

தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் இருந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு பயணிக்கும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

சஞ்சு சாம்சனுக்கு நடந்தது தவறு.. கம்பீருக்கும் அது தெரியும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

அப்படி வெளியான இந்திய அணியில் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனுக்கு இடம் வழங்கப்படவில்லை. அயர்லாந்து தொடரில் தடுமாறிய சஞ்சு சாம்சன் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டியிலும் சொதப்பியதால் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுக வாய்ப்பினை பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் சஞ்சு சாம்சன் இப்படி ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்த தனது கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் பகிர்ந்துள்ளார். அந்தர்வகையில் அவர் கூறியதாவது :

சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இப்படி திடீரென அணியில் இருந்து நீக்கப்படும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பதும் எனக்கு தெரியவில்லை. என்னை பொறுத்தவரை டாப் 3 வீரர்களும் இடது கை வீரர்களாக இல்லாமல் 3 ஆவது இடத்தில் சஞ்சு சாம்சனை விளையாட வைத்திருக்கலாம். அதைவிடுத்து அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு.

- Advertisement -

இதையும் படிங்க : ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கு கம்பீர் பயிற்சியாளராக இருக்க மாட்டார் – காரணம் என்ன?

இந்திய அணியின் நிர்வாத்திற்கும், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் சஞ்சு சாம்சனின் நீக்கம் தவறு என்று நிச்சயம் தெரியும். இருந்தாலும் அவர்கள் எதையோ முயற்சி செய்து பார்க்கிறார். இருப்பினும் நிச்சயம் சஞ்சு சாம்சன் இந்த தடைகளை கடந்து மீண்டு வருவார் என்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement