ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கு கம்பீர் பயிற்சியாளராக இருக்க மாட்டார் – காரணம் என்ன?

Gautam Gambhir
- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது.

அடுத்த 2 தொடர்களுக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் :

அதன்பின்னர் இங்கிலாந்தில் இருந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன் பின்னர் ஏசியன் கேம்ஸ் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து இந்திய அணி முக்கிய தொடர்களில் பங்கேற்க இருப்பதனால் ரசிகர்களுக்கு அடுத்த சில மாதங்கள் தொடர் போட்டிகள் காத்திருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர் எதிர்வரும் ஜிம்பாப்வே தொடர் மற்றும் ஏசியன் கேம்ஸ் ஆகிய தொடர்களுக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான வி.வி.எஸ் லட்சுமணன் பயிற்சியாளராக இந்திய அணியுடன் செல்வார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தொடர்ச்சியாக இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்று விளையாடுவதால் பயிற்சியாளருக்கும் போதுமான ஓய்வு தேவை என்பதற்காகவே கௌதம் கம்பீர் இந்த இரண்டு தொடர்களையும் தவற விடுகிறார் என்றும் அதன் காரணமாக வி.வி.எஸ் லக்ஷ்மணன் பொறுப்பு பயிற்சியாளராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் தல தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் அக்சர் படேல் – விவரம் இதோ

இப்படி பொறுப்பு பயிற்சியாளராக வி.வி.எஸ் லக்ஷ்மணன் இந்திய அணிக்காக செயல்படுவது இது புதிது கிடையாது. ஏனெனில் ஏற்கனவே ராகுல் டிராவிட் அதிகப்படியான தொடர்களை பயிற்சியாளராக சந்தித்தபோது இடையிடையே லக்ஷ்மணன் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement