ரஜத் பட்டிதாரை இதற்காகவாவது டீமில் சேருங்க ப்ளீஸ்.. இர்பான் பதான் போட்ட வைரல் பதிவு – விவரம் இதோ

Irfan Pathan and Rajat Patidar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை இழந்த இந்திய அணி இந்த இங்கிலாந்து தொடரிலும் முதல் தோல்வியை சந்தித்துள்ளது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரஜத் பட்டிதாரை தேர்வு செய்யுங்க : இர்பான் பதான் கருத்து

நேற்றைய இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் பேட்டிங் ஆர்டரில் உள்ள குறைபாட்டினை சரி செய்யும்படி தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அப்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசையை பார்த்தால் இடதுகை ஆட்டக்காரர்கள் பிளேயிங் லெவனில் முதல் ஏழு பேரில் ஆறு பேர் இருக்கின்றனர். இப்படி இடதுகை வீரர்கள் அதிகமாக இருக்கும் பேட்டிங் ஆர்டரில் ரஜத் பட்டிதார் போன்ற ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஏனெனில் உண்மையிலேயே அவரால் மிடில் ஆடரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அதோடு அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதினால் அவரை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. எனவே மிடில் ஆர்டரில் மேலும் ஒரு வலது கை ஆட்டக்காரரை கொண்டு வரும் வகையில் ரஜத் பட்டிதாரை முயற்சி செய்து பாருங்கள் என்று இர்பான் பதான் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சூர்யவன்ஷி அறிமுகமானது ஹேப்பி தான்.. ஆனா சஞ்சு சாம்சன் செய்த இந்த விடயத்தை மறக்காதீங்க – அம்பத்தி ராயுடு

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான கேப்டன்சி செய்த ரஜத் பட்டிதார் மிடில் ஆர்டரிலும் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். ஆர்சிபி அணிக்காக அடுத்தடுத்த இரண்டு கோப்பைகளையும் அவர் வென்று கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement