எல்லாம் சரியா போன நேரத்துல மேட்ச் மாறனதே இந்த இடத்தில் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

Shreyas Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணியிடம் தோற்க இதுவே காரணம் : ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 49 ரன்களையும், அபிஷேக் சர்மா 43 ரன்களையும் குவித்தனர். பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தல் 76 ரன்களையும், ஹாரி புரூக் மற்றும் டாம் பாண்டன் ஆகியோர் தலா 39 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது :

இந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட வீரரை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. 15 ஆவது ஓவர் வரை போட்டி நம்மிடம் தான் இருந்தது. அதன்பிறகு போட்டி அவர்களது பக்கம் சென்றது. குறிப்பாக 17 வது ஓவரின் போது அதிகளவு ரன்கள் சென்றதால் அது எங்களுக்கு பாதகமாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க அப்பா எடுத்த இந்த முடிவு தான்.. இன்னைக்கு நான் இவ்ளோ தூரம் வந்ததுக்கு காரணம் – சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

இருந்தாலும் இதன்மூலம் சில பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த ஆடுகளத்தில் நிச்சயம் இந்த ரன் போதுமானது தான் என்று நினைத்தோம். இருந்தாலும் பெத்தல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வீழ்த்தி விட்டார் என ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement