இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 750-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார். அதோடு ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக சிக்சர்களை அடித்த வீரராகவும் கிரிஸ் கெயிலின் சாதனையையும் அவர் முறியடித்து அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவதில் என்ன பிரச்சனை? :
இப்படி 2026 ஐ.பி.எல் தொடர் அவருக்கு மிகச் சிறப்பாக அமையவே இந்திய சீனியர் அணியில் அவருக்கு விரைவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரது மத்தியிலும் ஆதரவு பெருகியது. அதன் காரணமாக இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்ட அவர் இலங்கை நாட்டிற்கான சுற்றுப்பயணத்திலும் இடம் பிடித்திருந்தார். அதன் பின்னர் சில நாட்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அயர்லாந்து தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அறிமுகமாகாத வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து டி20 தொடரிலாவது அறிமுகம் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இப்படி அவருக்கு தொடர்ந்து அறிமுக வாய்ப்பு கிடைக்காமல் தாமதமாக என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் தற்போதைய இந்திய அணியின் துவக்க வீரர்களாக இருக்கும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தங்களது திறனை தரமாக நிரூபித்துள்ளனர். அதுமட்டும் இன்றி 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவர்களது செயல்பாடு கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவிடம் இருக்கும் இந்த பவர் கொஞ்சம் கூட மாறல.. பாராட்டி தள்ளிய – அஜய் ஜடேஜா
அதனால் இந்த இருவரையும் நீக்குவது என்பது சரியான முடிவாக இருக்காது எனவே வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வைபவ் சூர்யவன்ஷியிடம் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை அவரது பேட்டிங் ஆர்டர் தான். ஏனெனில் போட்டியின் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடி பழக்கம் இல்லாதவர் என்பதும் அவரது அறிமுகத்திற்கு தடையாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.



