இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி அபாரமாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் சஹா பிடித்த கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fly & Catch – Saha Style https://t.co/ETbaFqoTOd
— SAHIL GUPTA (@meetsahil) October 13, 2019
அதன்படி உமேஷ் யாதவின் பந்துவீச்சில் சஹாவின் இடதுபுறம் காற்றில் இருந்த பந்தை தனது அபாரமான டைவ் மூலம் காற்றில் பறந்தபடி கேட்ச் பிடித்து அசத்தினார் சஹா. இந்த கேட்ச் பார்த்து பிரமித்துப்போன கோலி ஓடி வந்து சகாவை கட்டிப்பிடித்து அவர் தலையில் முத்தம் கொடுத்து வரவேற்றார்.
மேலும் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் உலகின் சிறந்த கீப்பர் இவர்தான் என்று கோலி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த போட்டியில் சஹா கீப்பிங்கில் அசத்தினார். அவரது இந்த கேட்ச் வீடியோ இந்திய ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு வருவது மட்டுமில்லாமல் சஹாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.