இதுக்கு வைபவ் சூர்யவன்ஷியே விளையாடி இருக்கலாம் போலயே.. சஞ்சு சாம்சன் சொதப்பலால் – நெட்டிசன்கள் கிண்டல்

Sanju Samson and Vaibhav Sooryavanshi
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 26-ஆம் தேதியான இன்று பெல்பாஸ்ட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு சாம்சன் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏற்கனவே அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான பார்மில் இருப்பதினால் வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஷ்ரேயாஸ் ஐயர் டாசின் போதே தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 183 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய வேளையில் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதோடு அதற்கடுத்து வந்த இஷான் கிஷனும் 1 ரன்னில் நடையை கட்டி வெளியேறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : அயர்லாந்து அணிக்கு எதிராக 1 விக்கெட் எடுத்ததன் மூலம் 4 ஆவது இந்திய வீரராக ஷிவம் துபே – நிகழ்த்திய சாதனை

இப்படி முன்னணி டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கே விளையாட ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement