இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 26-ஆம் தேதியான இன்று பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அயர்லாந்து அணியானது :
4 ஆவது இந்திய வீரராக ஷிவம் துபே நிகழ்த்திய சாதனை :
20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டக்கர் 50 ரன்களையும், டெலானி 49 ரன்களையும் குவித்தனர். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே 3 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இப்படி அயர்லாந்து அணிக்கு எதிராக அவர் இன்று எடுத்த 1 விக்கெட் மூலம் நான்காவது இந்திய வீரராக ஒரு தனித்துவமான சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
அப்படி ஷிவம் துபே நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடும் ஷிவம் துபே தனது பிறந்தநாள் அன்று டி20 போட்டிகளில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக இந்திய அணி சார்பாக பிறந்தநாள் அன்று விக்கெட் வீழ்த்திய வீரர்களாக யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : 3 ஆவது இந்திய வீரராக தனித்துவமான சாதனையுடன் டி20 கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ
இவ்வேளையில் நான்காவது இந்திய வீரராக பிறந்தநாள் அன்று டி20 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தி 4 ஆவது இந்திய வீரராக ஷிவம் துபே தனித்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஹார்டிக் பாண்டியா இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவருக்கு இன்று பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



