அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட தயாராக காத்திருக்கிறது. இந்த டி20 தொடரானது ஜூன் 26-ஆம் தேதி துவங்கி ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன் :
இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடிக்கும் இந்திய அணி அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கும் சஞ்சு சாம்சன் முன்னாள் துவக்க வீரரான ரோகித் சர்மாவின் முக்கிய சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக ரோஹித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
அயர்லாந்து அணிக்கு எதிராக நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மூன்று அரை சதங்களுடன் 201 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 59 ரன்கள் சராசரியுடன் 118 ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணியுடன் வைபவ் சூர்யவன்ஷி இருக்கக்கூடாது.. இங்கிலாந்து வாரியம் போட்ட கட்டுப்பாடு – விவரம் இதோ
இதன் காரணமாக இன்னும் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க சஞ்சு சாம்சனுக்கு 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனை இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் சஞ்சு சாம்சன் எடுத்து விட்டால் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



