மொத்தமாக அவரை நீக்கவில்லை.. டி20 போட்டிகளிலும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு இருக்காம் – வெளியான தகவல்

Shubman Gill IND
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் சுப்மன் கில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்த அவர் துணை கேப்டன் பதவியையும் பெற்றிருந்தார். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ள தவறியதால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். 3 வகையான இந்திய அணிக்கும் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லுக்கு நிச்சயம் அந்த விடயம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

சுப்மன் கில் டி20 போட்டிகளுக்கான திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை :

இந்த மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டி20 அணியானது அங்கு நடைபெறவுள்ள டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடயிருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 16 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்சிக்கும் டி20 அணியில் இடம் கிடைத்தது. ஆனால் சுப்மன் கில்லுக்கு இனி டி20 போட்டிகளில் இடம் கிடைப்பது கடினம் என்று பலரும் கூறிவருகின்றனர். இவ்வேளையில் அவர் முழுவதுமாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விலக்கப்படவில்லை என்றும் சரியான நேரத்தில் சுப்மன் கில் அணியில் இணையலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

பி.சி.சி.ஐ சூரியகுமார் யாதவை டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு பிறகு சுப்மன் கில் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கவே ஆலோசனையை நடத்தியதாகவும் அதில் ஐ.பி.எல் போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தியதன் காரணமாகவே அவர் டி20 கேப்டனாக முன்னுரிமை பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக சுப்மன் கில் மீண்டும் சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது டி20 அணிக்குள் வரவும் வாய்ப்பு இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க ஹார்டிக் பாண்டியாவை குடுக்குறோம்.. பதிலுக்கு நீங்க அவரை தாங்க – ராஜஸ்தானுடன் டீல் போட்ட மும்பை இந்தியன்ஸ்

ஏசியன் கேம்ஸ் வரை இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நீடிப்பார் என்றும் தொடர்ச்சியாக அவர் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த 2028 டி20 உலக கோப்பை வரை கேப்டனாக இருப்பார். இல்லையெனில் சுப்மன் கில் அவருக்கு போட்டியாக டி20 அணிக்கு வரவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement