இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மெகா ஏலத்தில் 27 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். அதன் காரணமாக அந்த அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக விளையாடிய ரிஷப் பண்ட் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
ரிஷப் பண்ட் லக்னோ அணியிலுருந்து வெளியேற என்ன காரணம்? :
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்து வெளியேறியதால் அந்த அணியின் நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது ஏகப்பட்ட அதிருப்தியில் இருந்தது. அதேவேளையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடர் முடிவடையும் முன்பாகவே ரிஷப் பண்ட் தனது கேப்டன் பதிவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்ததாகவும் அதன் காரணமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் அறிவித்திருந்தது.
மேலும் லக்னோ அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள ரிஷப் பண்ட் வேறு அணிக்கு செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வேளையில் ரிஷப் பண்ட் தானாக வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் அந்த அணியின் நிர்வாகமே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் அந்த அதிருப்தி காரணமாகவே அவர் அந்த அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் வெளியான தகவலின் படி : 2026 ஐ.பி.எல் தொடர் முடிவடையும் முன்பே நிர்வாகம் அவரை கேப்டன் பதிவியிலிருந்து நீக்க வற்புறுத்தியதாலே அவர் பதவி விலகியதாக அறிவித்து தற்போது அணியிலிருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மொஹிந்தர் அமர்நாத்தின் மேலும் ஒரு முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா – விவரம் இதோ
மேலும் லக்னோ அணியிலிருந்து வெளியேறும் ரிஷப் பண்ட் தான் 8 சீசனாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கே குறைந்த சம்பளத்திற்கு செல்லவும் சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் லக்னோ அணியிலிருந்து ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு செல்வார் என்றும் டெல்லி அணியிலிருந்து குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு டிரேடிங் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.



