ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா :
அப்படி வெற்றி இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 110 ரன்கள் அடித்த வேளையில் ரோகித் சர்மா 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் நல்ல துவக்கம் பெற்றாலும் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்த ரோகித் சர்மா இந்த கடைசி போட்டியில் 69 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 79 ரன்களை குவித்து அசத்தலாக செயல்பட்டிருந்தார். அவரது இந்த இன்னிங்ஸ் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் அடித்த 79 ரன்கள் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிடின் முக்கிய சாதனை ஒன்றினை தகர்த்துள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா நிகத்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 50+ பிளஸ் ரன்களை அடித்த வீரராக மூன்றாவது இடத்தில் இருந்த முன்னாள் வீரரான ராகுல் டிராவிடை தற்போது ரோகித் சர்மா பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ
ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை ராகுல் டிராவிட் 94 முறை 50+ ரன்களை அடித்திருந்த வேளையில் ரோகித் சர்மா நேற்று அடித்த அரைசதத்தின் மூலம் 95-வது முறையாக 50+ பிளஸ் ரன்களை அடித்து மூன்றாவது இடத்தினை பிடித்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 154 முறை 50+ ரன்களை அடித்து முதலிடத்திலும், அவருக்கு அடுத்து விராட் கோலி 131 முறை 50+ பிளஸ் ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



