இதுமட்டும் நடந்தா உங்க கேப்டன்சி விமர்சனத்துக்கு உள்ளாகும்.. சுப்மன் கில் பத்திரமா இருங்க – கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar and Shubman Gill
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

சுப்மன் கில்லுக்கு அறிவுரை வழங்கிய சுனில் கவாஸ்கர் :

இந்த தொடரின் இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியின் போது 110 பந்துகளை சந்தித்த அவர் 22 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 154 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது பேட்டிங் தொடர்ந்து பிரமாதமாக இருந்து வருவதால் பலரது மத்தியிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவ்வேளையில் சுப்மன் கில் இனிவரும் காலங்களில் எச்சரிக்கையாக விளையாட வேண்டியது அவசியம் என்று அவருக்கு சில அறிவுரைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நீங்கள் நன்றாக ரன் குவிக்கும் போது உங்களது கேப்டன்சியும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் மிகச் சரியாக அமையும். அதேவேளையில் நீங்கள் சற்று பேட்டிங் ஃபார்ம் தவறினால் அது உங்களது கேப்டன்சியிலும் பிரதிபலிக்கும். ஏனெனில் நீங்கள் ரன் குவிக்காத போது நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக போகலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு இன்னொரு வாய்ப்பு தரனும்.. அதனால் கே.எல் ராகுல் அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகனும் – துணை கோச் பேட்டி

அப்படி பேட்டிங் பார்ம் இல்லாத போது உங்களது முடிவுகள் தவறாக போனால் அப்போது உங்களுடைய கேப்டன்சி பலராலும் விமர்சிக்கப்படும். எனவே கேப்டனாக இருக்கும் போது தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். ஒருவேளை நாம் சிறப்பாக விளையாடவில்லை என்றால் நம்முடைய கேப்டன்சியும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என சுப்மன் கில்லுக்கு கவாஸ்கர் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement