இந்திய அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 51 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 102 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
கம்பீரின் ஆலோசனைகள் குறித்து பேசிய ரஹ்மனுல்லா குர்பாஸ் :
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களை மட்டுமே அடித்திருந்த வேளையில் அதிகபட்சமாக குர்பாஸ் தனி ஒரு ஆளாக 102 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் சாகித் அப்ரிடிக்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக 50 பந்துகளுக்குள் சதம் அடித்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையையும் ரஹ்மனுல்லா குர்பாஸ் நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக தான் அடித்த சதத்திற்கு கௌதம் கம்பீர் கொடுத்த ஆலோசனைகள் பெரியளவில் உதவியதாக ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு கௌதம் கம்பீருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதிலும் குறிப்பாக அவரிடம் நான் என்னுடைய பேட்டிங்கில் என்னென்ன முன்னேற்றங்களை செய்ய வேண்டும்? எந்தெந்த மாற்றங்களை செய்ய வேண்டும்? என்கிற ஆலோசனைகளை கேட்டு அறிந்து கொண்டேன். அவரும் என்னுடைய பேட்டிங்கில் உள்ள மாற்றங்கள், ஷாட் செலக்ஷன் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க : இந்திய அணியிடம் நாங்க இப்படி தோக்க இதுமட்டும் தான் காரணம் – ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி
அவர் கூறியதற்கு பின்னர் சில பயிற்சிகளை கடினமாக இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக மேற்கொண்டிருந்தேன். அதன் விளைவாகவே இந்திய அணிக்கு எதிராக இந்த சதம் வந்துள்ளது. இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடிப்பது என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று என ரஹாமனுல்லா குர்பாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



