ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் ரோஹித் சர்மா – நிகழ்த்தப்போகும் சாதனை

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஏற்கனவே இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 13-ஆம் தேதியான நாளை தரம்சலாவில் துவங்குகிறது. பின்னர் ஜூன் 17-ஆம் தேதி லக்னோவிலும், ஜூன் 20-ஆம் தேதி சென்னை மைதானத்திலும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை :

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்க காத்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை அந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் நிகழ்த்த உள்ளார். அதிலும் குறிப்பாக 37 ஆண்டுகால சாதனையை அவர் தகர்க்க உள்ளார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக அதிக வயதில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரராக மொஹிந்தர் அமர்நாத் முதலிடத்தில் உள்ளார். அவர் தனது 39-ஆவது வயது 36-வது நாளில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

அதன் பின்னர் தற்போது 37 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்காக விளையாட இருக்கும் ரோகித் சர்மா தனது 39 -ஆவது வயது 44-வது நாளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையில் முதலிடம் பிடித்த காத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலை விட அந்த இடத்திற்கு இஷான் கிஷன் தான் பொறுத்தமாக இருப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஒட்டுமொத்தமாக சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக வயதில் விளையாடிய வீரராக நெதர்லாந்து வீரர் ரோலன் கிளார்க் தனது 47-வது வயது 257-வது நாளில் விளையாடியது சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement