அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இருந்து – நீக்கப்பட்ட முன்னணி வீரர்

Mohammed Siraj
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 அணியானது அங்கு நடைபெறவிருக்கும் டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி முக்கிய வீரர் ஓய்வு :

அந்த வகையில் இம்மாதம் இறுதியில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது முதலில் அங்கு நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்து அங்கு நடைபெறயிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடர் முடிந்த கையோடு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கின்றது. இந்நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் விளையாட மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வெளியான தகவலின் படி : முகமது சிராஜ் கடந்த ஓராண்டாகவே அதிகப்படியான போட்டிகளில் விளையாடி வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர் இந்த இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

மேலும் முகமது சிராஜுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளாரான பிரசித் கிருஷ்ணா அவருக்கு பதிலாக இடம் பெறுவார் என்றும் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முகமது இந்த தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement