இந்திய அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. பின்னர் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று அங்கு 5 போட்டியில் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.
ஹார்டிக் பாண்டியா டி20 அணியில் இடம் பெறாதது ஏன்? :
எதிர்வரும் இந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வகமாக அறிவித்திருந்தது. அதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதிவு வழங்கப்பட்டது. அவரது தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.
அதில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவிற்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் அவர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்திருந்தது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு மோசமாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் ஹார்டிக் பாண்டியாவின் நீக்கம் குறித்த உண்மை தகவலை தற்போது இந்திய அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெளியான அறிக்கையின்படி : ஹார்டிக் பாண்டியா டி20 போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் அவர் தற்போது உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்டிருப்பதால் மீண்டும் அவர் டி20 போட்டிகளில் முழுவதுமாக பந்துவீசும் அளவிற்கு தயாராகும் வரை அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : ஐயர்லாந்து மற்றும் இங்கிலாந்து என இரண்டு தொடரிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறாதது ஏன்? – காரணம் இதோ
அதோடு அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் ஒருநாள் போட்டிகளில் அவர் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர் டி20 போட்டியில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ஹார்டிக் பாண்டியா முழு உடற்தகுதியை எட்டி மீண்டும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் செய்தால் நிச்சயம் அடுத்து வரும் டி20 தொடர்களில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



