என்னை கண்டால் இந்திய அணியின் வீரரான இவர் நடுங்குவார். என் பந்தை அவரால் தொடக்கூட முடியவில்லை – பாக் வீரர் பேட்டி

Irfan-2
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது இர்பான் பாகிஸ்தான் அணிக்காக சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி உள்ளார். 7 அடி உயரமுள்ள இவர் 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளையும், 20 டி20 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Irfan 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானின் முதல் தரப் போட்டிகளில் விளையாடி வரும் இர்பான் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் வீரரான கம்பீர் என்னை பார்த்தால் பயப்படுவார். மேலும் 2012ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் தொடரில் நான் நான்கு முறை அவரை வீழ்த்தியுள்ளேன். அதனாலேயே அவர் என்னைக் கண்டால் பயப்படுவார் மேலும் பயிற்சியின்போது கூட என் கண்களைப் பார்க்க மாட்டார்.

எனக்கு எதிரே வர மாட்டார் இன்னும் சொல்லப்போனால் என்னாலேயே அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைக்கிறேன். ஏனெனில் பாகிஸ்தான் தொடரை அடுத்து அவர் இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் விளையாடினார். அதன்பிறகு அணிக்கு அவர் திரும்பவே இல்லை எனவே என்னால் தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நான் கூறுவேன்.

Irfan

எனது உயரத்தின் காரணமாக அவர் எனது பந்தை கணிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். 130 முதல் 135 கிலோ மீட்டர் வரை பந்துவீச்சு வேன் என்று அவர் நினைத்திருப்பார் ஆனால் 445 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியதால் அவரால் என் பந்தை தொடக்கூட முடியவில்லை. கடைசியில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை என்னால் முடிவுக்கு வந்தது என்று நினைக்கிறேன் என்று முகமது இர்பான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement