கப் ஜெயிச்சிட்டேன்.. ஆனா அருகில் நீங்கள் இல்லையே.. மறைந்த தந்தையை நினைத்து – ரிங்கு சிங் நெகிழ்ச்சி பதிவு

Rinku Singh
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரிங்கு சிங் ஆரம்பகட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பிளேயிங் லெவனில் விளையாடி இருந்தாலும் பிற்பாதியில் அணியின் சமநிலையை காரணம் காட்டி வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியுடன் இணைந்து இருந்த அவர் கோப்பையை கைப்பற்றிய போதும் தனது மகிழ்ச்சியை மைதானத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

தனது தந்தை மறைவு குறித்து ரிங்கு சிங் பகிர்ந்த பதிவு :

ஆனால் இந்த தொடர் அவருக்கு ஒரு சாதாரணமாக தொடராக அமையவில்லை. மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒரு தொடராக முடிவடைந்துள்ளது. ஏனெனில் இந்த தொடரின் லீக் சுற்று போட்டியில் அவர் விளையாடி வந்த வேளையில் திடீரென அவரது தந்தை கல்லீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் தனது உயிருக்காக போராடி வந்தார். ஒரு கட்டத்தில் அவரது புற்றுநோயின் தாக்கம் தீவிரமடையவே இடையில் இந்திய அணியில் இருந்து விலகிய அவர் உடனடியாக சொந்த ஊருக்கு சென்று தனது தந்தையை மருத்துவமனையில் சந்தித்த பிறகு மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து விளையாடி வந்தார்.

- Advertisement -

இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறும் ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அவர் மோசமான உடல்நிலை காரணமாக உயிரிழந்தார். தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு வீட்டிற்கு சென்ற ரிங்கு சிங் உடனடியாக இறுதி சடங்குகளை முடித்த கையோடு மீண்டும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைந்திருந்தார். தற்போது இந்திய அணி உலக கோப்பை தொடரை வென்ற பின்னர் மறைந்த தனது தந்தையை நினைத்து நெகிழ்ச்சியான ஒரு கருத்தை அவரது சமூகத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : இத்தனை நாட்கள் உன்னிடம் பேசாமல் நான் இருந்ததில்லை. இனி நீ இல்லாமல் இனிவரும் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதும் எனக்கு தெரியவில்லை. கடமைதான் முக்கியம் என்று நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். அதனால் தான் நான் களத்தில் உங்களது கனவை நிறைவேற்ற முயற்சித்தேன். இப்போது உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உங்களது கனவு நினைவாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆரம்பம் நல்லா இல்ல.. ஆனா கடைசி மேட்சை சாதனையுடன் முடித்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ

இந்த தருணத்தில் நீங்கள் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு சந்தோஷத்திலும் நீங்கள் இல்லாததை உணருவேன். நான் உங்களை மிகவும் மிஸ் செய்வேன் அப்பா என தனது தந்தையின் மறைவு குறித்து அவர் நெகிழ்ச்சியான கருத்தினை பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement