சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது இதுவரை எந்த ஒரு டி20 தொடரையும் இழக்காமல் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.
இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் இருக்கு : இலங்கை வீரர் பேட்டி
ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியில் அசத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதோடு அணியில் சரியான ஆல்ரவுண்டர்களும், பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியான வீரர்கள் என்பதால் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் 300 ரன்களை தொடுமா? என்று கூட பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தி வரும் பேட்டில் சிறிதளவு ரப்பர் இருக்கிறது. அதனால் தான் அவர்களால் இவ்வளவு அதிரடியாக விளையாட முடிகிறது என்று ஒரு சர்ச்சையான கருத்தினை இலங்கை வீரரான பனுகா ராஜபக்சே வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளை எந்த ஒரு வெளிநாட்டிலும் மற்ற வீரர்களால் வாங்க முடியாது. அவர்களுக்கு என்றே தனியாக பேட்டுகளை தயாரிக்கிறார்கள் என்று நினைக்கிறன். அதனால் தான் அவர்களது பேட்டிங் இவ்வளவு சிறப்பாக இருக்கிறது. அவர்களது அதிரடிக்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறன்.
இதையும் படிங்க : பி.சி.சி.ஐ சென்ட்ரல் கான்டராக்ட்டில் இடம்பெறாத 5 நட்சத்திர இந்திய வீரர்கள் – விவரம் இதோ
அதோடு அவர்களுக்காக தயார்படுத்தப்படும் பேட்டுகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. அதில் நிச்சயம் ஏதோ ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற பேட்டுகளை மற்ற வீரர்களால் வாங்க முடியாது. மேலும் இந்திய வீரர்களால் எப்படி இவ்வளவு அதிரடியாக விளையாட முடிகிறது என்று யூகிக்க முடியவில்லை என ஒரு சர்ச்சையான கருத்தை அவர் முன் வைத்துள்ளார்.



