இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்துள்ளது.
உலக சாதனை நிகழ்த்தி அசத்திய சூரியகுமார் யாதவ் :
இதன் காரணமாக 272 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது. இந்த ஐந்தாவது டி20 போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே மிக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு சென்றது திருவனந்தபுரம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 103 ரன்களையும், கேப்டன் சூரியகுமார் யாதவ் 63 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக மூன்றாவது இந்திய வீரராக 3000 ரன்களை சர்வதேச டி20 போட்டிகளில் கடந்தார்.
ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களை குவித்த வேளையில் மூன்றாவது இந்திய வீரராக இந்த சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் இணைந்துள்ளார். அதேவேளையில் அவர் இந்த 3000 ரன்களை கடந்த போது மாபெரும் உலக சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : மீண்டும் ஒருமுறை ஏமாற்றிய சேட்டா சஞ்சு சாம்சன்.. அமைதியான திருவனந்தபுரம் மைதானம் – நடந்தது என்ன?
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரக வீரரான முகமது வாசிம் 1947 பந்துகளில் இந்த சாதனை நிகழ்த்தியிருந்த வேளையில் அவரது இந்த சாதனையை சூரியகுமார் யாதவ் தற்போது 1822 பந்துகளிலேயே கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



