நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 31-ஆம் தேதியான இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
கேரளா ரசிகர்களை ஏமாற்றிய சஞ்சு சாம்சன் :
ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டாலும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதான நடைபெறும் கடைசி போட்டி என்பதனால் இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் சொந்த மண்ணில் முதல் முறையாக விளையாடும் சஞ்சு சாம்சனின் ஆட்டமும் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஏனெனில் இதுவரை கேரளா மைதானத்தில் ஒரு போட்டியில் கூட இந்திய அணிக்காக விளையாடாத அவர் இன்று முதல்முறையாக பங்கேற்றார். அதனால் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.
அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த ஐந்தாவது போட்டியில் 6 பந்துகளை மட்டுமே சந்தித்த சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது திருவனந்தபுரம் மைதானம் முழுவதும் அமைதியாக மாறியது. பின்னர் தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க : கவலையே படாதீங்க.. உங்க ஆளு விளையாடுறாரு.. கேரளா ரசிகர்களை குஷி படுத்திய – சூரியகுமார் யாதவ்
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 போட்டிகளில் விளையாடியிருந்த சஞ்சு சாம்சன் வெறும் 40 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்த வேளையில் இந்த போட்டியிலும் 6 ரன்கள் மட்டுமே அடித்ததால் அவரது பேட்டிங் பார்ம் கவலைக்கிடமாக மாறியுள்ளது.



