2 முக்கிய மாற்றங்கள்.. 5 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே இந்த தொடரில் நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள கடைசி ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

5 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஜனவரி 31-ஆம் தேதியான இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வீரராக இடம்பெற்றிருக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்கும் வகையில் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக கடந்த போட்டியின் போது காயம் காரணமாக விளையாடாத இஷான் கிஷன் மீண்டும் பிளேயிங் லெவனுக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இணையலாம் என்றும் தெரிகிறது. அதை தவிர்த்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை வீழ்த்த என்கிட்ட சரியான பிளான் இருக்கு.. அவரை நிச்சயம் வீழ்த்துவேன் – நியூசி பவுலர் பேட்டி

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஷிவம் துபே, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) வருண் சக்கரவர்த்தி, 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement